கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கம் மற்றும் ‘த ஹோப்’ அமைப்பு என்பன இணைந்து நடாத்தும் கல்லீரல் தொடர்பான மாபெரும் இலவச சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் (Muslim Ladies Study Circle) பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
காலை 9.30 முதல் 11.30 வரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கல்லீரலின் பிரயோகங்கள்,அதன் ஆரோக்கியமான பராமரிப்பு, நீண்ட ஆயுள் சுகாதார போசாக்குமிகு வாழ்க்கை வட்டம், கல்லீரல் கொழுப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட தலைப்புகளில் வைத்திய ஆலோசனை, வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
இந்திய அஸ்டர் வைட் பீல்ட் பெங்களூர் வைத்தியசாலையின் கல்லீரல் சம்பந்தமான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் HRS GIN அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
அனைவரும் இந்த வழிகாட்டல் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முற்பதிவுகளுக்கு அழையுங்கள்
சகோதரி பௌசியா 0767313247
அல்ஹாஜ் M Z அஹ்மத் முனவ்வர்
0778913252