கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வ்ராய் கெலீ பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதில் கெலி பல்தசார் 61 வாக்குகளையும் ரீஸா சரூக் 54 வாக்குகளையும் பெற்றனர்.
கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், கொழும்பு மாநாகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலீ பல்தசார் 61 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரீஸா சரூக் 54 வாக்குகளையும் பெற்றனர்.
கொழும்பு மாநாகர சபையின் பிரதி மேயராக ஹேமந்த குமார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.