கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய மேல்மாகாண உள்ளுராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் இரகசிய வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை கொழும்பு மாநகர மேயர் தெரிவுக்காக வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாகக் கோரி சபையில் சர்ச்சை எழுந்துள்ளது.
மேயர் தெரிவுக்காக வழங்கப்பட்ட வாக்குச்சீட்டு சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் மாத்திரம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக சபையில் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் உள்ளுராட்சி ஆணையாளர் வாக்குச் சீட்டை வாசித்துக் காட்டியதுடன், தமிழ் மொழியிலும் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டவர்களின் பெயர் விபரங்களை அச்சிட்டு வழங்கப்பட்டது.