பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் கைது செய்யப்படும்போது தாக்கப்பட்ட முன்னாள் கிறீன்ஸ் வேட்பாளர் ஹன்னா தாமஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிட்னி தென்மேற்கு பகுதியிலேயே நேற்று இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் முற்படுகையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்போதே ஹன்னா தாமஸின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. 35 வயதான அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
தற்போது சத்திரசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள கடுமையான போராட்ட எதிர்ப்பு சட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை குறிப்பாக பலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக போராடுபவர்களை பூதாகரமாக சித்தரிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டங்கள் பொலிஸாருக்கு கடும் வன்முறையை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கான துணிச்சலை வழங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.