20 வருட கடூழிய சிறைத்தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கரம் பலகைகள், 11,000 டாம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் ரூ. 53 மில்லியன் நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.