கொழும்பு மற்றும் களுத்துறையிலுள்ள பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை (06) அதிகாலை மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பியகம – பன்னிப்பிட்டிய பிரதான மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
மின் தடை ஏற்பட்ட பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதுடன், ஏனைய பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.