மதிப்பிற்குரிய சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் அவர்களுக்கு, அவரது தெய்வீக கிரியைகள் மற்றும் சமூகத்திற்கான அற்புத சேவையை பாராட்டி, “கவிச்செம்மல் கிரியாதிலகம்” எனும் கௌரவ பட்டம் வழங்கி பெருமையுடன் கௌரவிக்கப்பட்டார்.
கடந்த ஜூன் 19 ஆம் திகதி, கனடா மிசிசாகாவில் அமைந்துள்ள ஶ்ரீ ஹரிகரசுதன் ஐயப்பன் ஆலயத்தில், ஆலய அவையோர் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் முன்னிலையில் இந்த சிறப்புவிழா விமர்சையாக நடைபெற்றது.
விழாவில், சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், தமிழ் சமூக தலைவர்கள் மற்றும் பண்பாட்டு அமைப்பினர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, அவரது அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் கிரியைகளை நினைவுபடுத்தும் விதமாக வழங்கப்பட்டது.
சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் ஐயா அவர்கள் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத்தலைவர்களுள் ஒருவராகவும், அனைத்து மதங்களிடையிலான ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்புக்காக சிறப்பாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.