தரமற்ற மருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வந்த நிலையில், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.