துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Date:

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ,சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று (09) கைது செய்யப்பட்டார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த ஒரு கைதியை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிறு (08) இரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர், நேற்று (09) இரவு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...