மாத்தறை – வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று இடம்பெறவிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களது உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டதாகவும் சபை அமர்வு நடவடிக்கையை ஒத்திவைக்குமாறும் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்கள் தென் மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளரிடம் கோரியுள்ளனர்.
எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
கடத்தப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் மீண்டும் அழைத்து வரப்பட்டால் மட்டுமே சபை நடவடிக்கைகளைத் தொடங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியிலிருந்து வெலிகம பிரதேச சபைக்கு 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.