தேசிய ஷூரா சபையின் பெருநாள் செய்தி

Date:

தேசிய ஷூரா சபை (NSC) அனைவருக்கும் தியாகத் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டில் விரைவில் பொருளாதார வளமும், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நலமும் மீண்டும் ஏற்படும் சூழ்நிலை உருவாக வேண்டும் என அது பிரார்த்திக்கிறது.

இந்த ஆண்டு தியாகத் திருநாளை முஸ்லிம்கள் கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டின் அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் ஒற்றுமை, அமைதி,நம்பிக்கை மற்றும் மரியாதை என்பன மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அது எதிர்பார்க்கிறது.

தியாகமயமான வாழ்க்கையை வாழ்ந்த நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்வு முறை பற்றி சிந்திக்குமாறு முஸ்லிம்களுக்கு ஷூரா சபை நினைவூட்டுகிறது.

மகிழ்ச்சி நிறைந்த ஒரு தேசத்தை நிறுவ உறுதியுடன் பங்களிக்கும் படியும், உலக அமைதிக்காக பிரார்த்திக்கும் படியும் அனைவரையும் தேசிய ஷூரா சபை வேண்டிக் கொள்கிறது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...