மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது கண்காணிப்பில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாயன்று ( 10.06.2025) ஏறாவூர் அல் முனீரா பாலிக்கா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது கபே (CaFFE) அமைப்புடன் இணைந்து தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கு அன்றைய தினம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உயர்தர பரீட்சைகளில் தோற்றிய மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்கள், பட்டதாரிகள் என அதிகளவிலான இளைஞர் யுவதிகள் பலரும் தேர்தல் கண்காணிப்பின் போது தொண்டர்களாக இணைந்து சிறந்த முறையில் பங்களிப்பினை வழங்கியிருந்தனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலின் போது கபே அமைப்பினால் பல்வேறு பிரதேசங்களிலும் நடத்தப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களை அறிவூட்டல், சமாதானமான தேர்தலுக்காக ஒன்று பாடுவோம் என்ற தொனிப் பொருளிலான நிகழ்ச்சிகள், தேர்தல் தின கண்காணிப்பு நடவடிக்கைகள், வாக்குகளை எண்ணுகின்ற சந்தர்ப்பத்திலான கண்காணிப்பு நடவடிக்கைகளில் இந்த தன்னார்வுத் தொண்டர்கள் பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் இணைப்பாளர் அல்ஹாஜ் மீரா ஷாகிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்கள். நிகழ்வின் விசேட அதிதிகளாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மவுஜூத் . மற்றும் கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணை இணைப்பாளர் எம் தர்ஷன். மற்றும் கபே அமைப்பின் கோரலை பற்று பிரதேச இணைப்பாளர் எம் எஸ் சிராஜீதின் , மட்டக்களப்பு மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம் எஸ் எம் நசீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.