நேபாள நாட்டின் தலைநகரமான காத்மண்டு மெட்ரோபொலிடியன் நகரத்தில் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச கல்வி மாநாட்டில், இலங்கையின் புத்தளத்தைச் சேர்ந்த MH School of Excellence பாடசாலையின் அதிபர் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல் சிறப்புரையாற்றவுள்ளார்.
‘கல்வித்திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் புதுமைகளை செயல்படுத்தல்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்ற உள்ளார். இந்த மாநாடு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் தங்கள் அனுபவங்களையும் புதிய யோசனைகளையும் பகிரும் ஒரு மேடையாக அமைகிறது.
இந்த அமைப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜ்மலுக்கு சிறப்பு மரியாதையும் வழங்கப்பட உள்ளது. இச்சிறப்பு வாய்ந்த நிகழ்வில் அவரது பங்களிப்பு, நாடுகளுக்கிடையிலான கல்வி ஒத்துழைப்பையும், கல்வித்துறையில் புதுமைகளை ஊக்குவிக்கும் முயற்சியையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.