பிரதியமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான ஹர்ஷண சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
கலாநிதி ஹர்ஷண சூரியப்பெருமவின் கடிதத்திற்கு அமைய குறித்த பதவி விலகல் இன்று (2025 ஜூன் 20ஆம் திகதி) முதல் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இதற்கு அமைய, 10ஆவது பாராளுமன்றத்தில் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெருமவின் ஆசனத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக 1981ஆம் ஆண்டு ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (5)ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, அவர் பிரதியமைச்சராக பதவி வகித்த நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சினுடைய செயலாளராக அவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.