சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் தற்போது சீனா சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உட்பட்ட ஜேவிபியின் பிரதிநிதிக்குழு சீன கம்யூனிஸ்ட் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸிஜியாங் (Zhejiang) மாகாண ஆளுநர் லியு ஜியோ (Liu Jie) கலந்துகொண்டார்.
இச்சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சென்ற குழுவில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, முனீர் முழப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், தீப்தி வாசலகே, தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.