பலஸ்தீனத்தின் சுதந்திரத்துக்காக இன்று (30) கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
பலஸ்தீன ஒருமைப்பாட்டு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பு கொம்பனித்தெருவில் ஆரம்பித்து, அமெரிக்க தூதரகம் வரை பேரணியாக சென்று, அங்கு எதிர்ப்பு முழக்கங்களுடன் தொடரப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
“பலஸ்தீனத்திற்கு சுதந்திரம்”, “தனி நாடு உருவாக்கப்பட வேண்டும்”, “இஸ்ரேல் மேற்கொண்ட யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பலஸ்தீன மக்களின் நலன் மற்றும் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தும் இந்தப் பேரணியில், கலவரமின்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.