கொத்மலை, ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் நேற்று புதன்கிழமை (11) கையளிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த குறித்த விசாரணைக்குழுவின் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண,
குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட, 84 பேர் பயணித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதனை அடுத்து அருகிலுள்ள குழியொன்றில் விழுந்து பஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்தே விபத்து நேர்ந்துள்ளது.
எவ்வாறாயினும் விபத்தில் மரணித்த மேற்படி சாரதியின் மீது முழுப் பொறுப்பையும் சுமத்த முடியாது என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.