புனித ஹஜ் பயணத்திற்கு உலகம் முழுவதும் இருந்து யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவின் மக்காவுக்கு திரண்டுள்ளனர். நாளை முதல் இந்த ஆண்டுக்கான ஹஜ் கடமைகள் தொடங்கவுள்ளன.
இந்த வேளையில், ஹஜ் பயணிகளுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒரு உணவகமான “அல்பைக்” என்ற பெயருடைய பிரபல உணவகம், அதன் அறுசுவை உணவுகளுக்காக உலகளாவிய அளவில் அறியப்படுகிறது.
ஹஜ்ஜில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான மக்கள், அல்பைக் உணவகத்தில் உணவருந்த வரிசையில் காத்திருக்கின்றனர். எப்போதும் மக்கள் குவிந்து காணப்படும் இந்த உணவகம், ஹஜ் பருவத்தில் மேலும் பரபரப்பாக மாறியுள்ளது.