புதிய பொருளாதாரப் மாற்றங்களால் இரு நாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராய்வு

Date:

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  நேற்று (13)  பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மனி பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து கலந்துரையாடினார்.

உலகளாவிய புதிய பொருளாதாரப் மாற்றங்களின்போது இரு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான சவால்கள் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தக் கூடிய துறைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இலங்கை ஜெர்மனி தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (Ceylon German Technical Training Institute (CGTTI) ) போன்ற தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கும் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்காகவும் ஜெர்மனி வழங்கும் பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். அந்தப் பங்களிப்புகள் மற்றும் ஆர்வத்தையும் எதிர்காலத்தில் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...