வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை முதல் ஆரம்பம்!

Date:

அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படும் என வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான உப பொலிஸ் பரிசோதகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் அறிவித்தலின்படி, இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

இந்த விசேட நடவடிக்கையின் போது, வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள அதீத  ஒளி விளக்குகள், அதீத ஒலிகளை வெளியிடும் ஸ்பீக்கர்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் போன்ற உதிரிபாகங்கள் அகற்றப்படும்.

 

இந்த தேவையற்ற உதிரிபாகங்கள், விபத்துகள் நேரும்போது வீதி பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என  உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

“2024ஆம் ஆண்டில் மாத்திரம் 815 பேர், குறிப்பாக நடைபயணிகள், வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டில், வீதி போக்குவரத்து திணைக்களம் 8,788 வாகனங்களை பொது வீதிகளில் ஓட்டத் தகுதி இல்லாதவை என அடையாளம் கண்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...