ஈரானில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பிறிதொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், அமினி வில்லா, கோஹெஸ்டன் எளி, இமாம் கோமெய்னி தெரு, ஓவ்லோம், மசால், ராஷ்ட் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
+989392055161 / +989912057522 / +989366360260 ஆகிய தொடர்பு இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் slembiran@yahoo.com என்ற முன்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும் என்றும் வௌிநாட்டு அலுவல்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆகவே, ஈரானை விட்டு வெளியேற விரும்பும் அல்லது உதவி தேவைப்படும் எந்தவொரு இலங்கையரும் மேற்கண்ட முகவரிக்கோ, தொலைபேசி, மின்னஞ்சலுக்கோ தொடர்பு கொள்ள முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.