ஹிஜ்ரி புத்தாண்டு, இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட ஒரு வளமான, நல்ல நடத்தை கொண்ட சமுதாயத்தை “பெருமானார் (ஸல்) அவர்கள் கட்டமைத்த மதீனா சமுதாயத்தை உம்மா மதானியைக் கட்டியெழுப்ப” நமக்கு ஓர் அழைப்பைக் கொண்டு வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மஆல் ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறினார்.
இடம்பெயர்வு என்பது ஓர் இடமாற்றம் மட்டுமல்ல, அது ஒரு புதுப்பித்தல் செயல்முறையாகும். அறிவு, ஒருமைப்பாடு, ஒற்றுமையின் உணர்வோடு தொடர்ந்து நாம் முன்னேறுவோம் என்று சொல்லும் வழிகாட்டுதல் ஆகும்.
இந்த ஆண்டு மிகவும் அருள் வளம்மிக்க, அர்த்தமுள்ள வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கட்டும்.
மனந்திரும்பி, சூரா அல்-பகராவின் வசனம் 218 இல் உள்ள வசனத்தை இந்த நல்ல நாளில் நினைவுகூர்வோம்.
இறைவனுக்காக தம் வீடு வாசல்களைத் துறந்தார்களோ, மேலும் இறைவழியில் ஜிஹாத் செய்தார்களோ, அவர்களே அல்லாஹ்வின் நல்லருளை (நியாயமாக) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அல்லாஹ் அவர்களின் பிழைகளைப் பெரிதும் மன்னிப்பவனாகவும் இன்னும் அவர்கள் மீது பேரருள் புரிபவனாகவும் இருக்கிறான்.
இவ்வாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மஆல் ஹிஜ்ரா புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.