மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் தொடர்பாக முற்கூட்டிய தயார்நிலை இருக்க வேண்டிய தேவை பற்றி அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
அதற்கமைய, மத்தியகிழக்கு போர்ச்சூழல் தொடர்பாக ஆராய்ந்து, தாக்கங்கள் ஏற்படக்கூடிய துறைகள், தாக்கத்தின் அளவு மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றி மீளாய்வு செய்து, பொருத்தமான விதந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்துள்ளது.
இதேவேளை, குறித்த உபகுழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.