மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவுப் பேருரை கொழும்பில் இன்று..!

Date:

மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் தொடர்பான நினைவுப் பேருரை இன்று (30)  மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர். டபிள்யூ விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

AL ASLAF FOREBEAR நினைவு மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஷூரா சபையின் தலைவரும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணியுமான எம்.எம்.சுஹைர் PC பங்கேற்கவுள்ளதுடன் கெளரவ விருந்தினராக சீனத் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.எச்.எம். மாஹிர் (JP) அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

முக்கிய உரையை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் எம்.எம்.எம். ஸாபிர் அவர்களும் நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...