நாளை ஜேர்மனிக்கு புறப்படவுள்ள ஜனாதிபதி

Date:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமாக நாளை(10) இரவு ஜேர்மனிக்குப் பயணமாகின்றார்.

ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் ஜேர்மனியில் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் குறித்து ஆலோசிக்க ஜேர்மனியின் ஜனாதிபதி, முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிற பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.

இலங்கையின் பொருளாதார மாற்றம், உருவாகிவரும் முதலீட்டு வாய்ப்புக்கள், நாட்டின் வளர்ச்சித் திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில், ஜேர்மனியில் உள்ள முக்கிய தொழிற்துறைகளுடன், ஜேர்மன் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை (DIHK) ஏற்பாடு செய்யும் வணிக மன்றத்திற்கு ஜனாதிபதி அநுர தலைமை தாங்கவுள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...