ஈரான் மீது இஸ்ரேல் இன்று (13) நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைதியின்மை காரணமாக, விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு வரும் மற்றும் புறப்படும் இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் எப்போதும் குடிநீரையும் உலர் உணவையும் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கைத் தூதரகம் அறிவுறுத்துகிறது, மேலும் தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.