இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இந்த நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.