இந்திய விமான விபத்துக்கு துருக்கிய தொழில்நுட்ப நிறுவனம் காரணமாம்: இந்திய இராணுவ ஆய்வாளர் அர்னாப் கொஸ்வாமி தகவல்!

Date:

ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய வானூர்தி விபத்து, குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் இன்னும் உயிரிழப்புகள் அதிகமாகக் கூடும் என்கிறார்கள்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் பலர் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றார்கள். அந்தவகையில் முகப்புத்தகத்தில் கை.அறிவழகன் என்பவர் பதிவிட்டுள்ள கருத்துக்கள்…

மிகப்பெரிய துயரம், மனம் கனத்துப் போயிருக்கிறது, தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இருக்கை எண் 11A இல் பயணித்த உயிர்பிழைத்த ஒருவர் குறைந்த அளவுக் காயங்களோடு நடந்து போவதை  வீடியோ மூலம் காட்டப்படுகின்றது.

தேசபக்தரும், இந்திய இராணுவ ஆய்வாளருமான அர்னாப் கோஸ்வாமியின் Republic TV இல் விபத்து தொடர்பான விவாதம் நடக்கிறது.

அர்னாப் சொல்கிறார், “Air India வானூர்திகளை Maintain செய்வது ஒரு இஸ்லாமிய நாடான துருக்கியைச் சேர்ந்த நிறுவனம், இந்தியாவின் எதிரி நாடும், பாகிஸ்தானின் நட்பு நாடுமான துருக்கிய நிறுவனத்தில் Turkish Technique பயன்படுத்தி Maintain செய்யப்படுவதால் தான் இந்த விபத்து நடந்திருக்கிறதா?”

ஒரு விபத்தை எப்படி மதச்சார்பாக மாற்றி தேசபக்த நாடகம் நடத்தலாம், அதன் வழியாக TRP யை ஏற்றிக் கொள்ளலாம், இந்துத்துவப் பரிவாரங்களின் கரத்தை வலிமை செய்யலாம் என்று யோசிக்கிறார் அர்னாப்.

உலகின் மிகக் கொடூரமான, குரூரமான சிந்தனை கொண்டவர்கள் இந்திய வலதுசாரிகள் என்பதற்கு இது ஒரு சோற்றுப் பதம். பாகிஸ்தானும், துருக்கியும் இணைந்து இதைத் திட்டமிட்டு நடத்தி இருக்கிறார்கள் என்றும், ஆகவே பீகார் மக்களே நீங்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மோடி பேசுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் இருக்கிறது.

பேய்களின் ஆட்சியில் பிணந்தின்னும் சாத்திரங்கள்…

விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல். காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெறட்டும். வணிகத்தைத் தாண்டி வானூர்தி நிறுவனங்கள் மனித உயிர்களின் மதிப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

-கை.அறிவழகன்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...