2025 புனித ஹஜ் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்திருப்பது உலக முஸ்லிம்களுக்கு பெருமை தரும் விடயமாகும்: அல்ஹிக்மா நிறுவனத்தின் தலைவர் ஷேஹுத்தீன் மதனி பாராட்டு!

Date:

சவூதி அரேபியாவின் அரசால் 2025 ஹஜ் சீசனை வெற்றிகரமாக முடித்திருப்பது உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களுக்கு பெருமை சேர்ப்பதாக அல் ஹிக்மா நிறுவனத்தின் தலைவர் ஷேஹுத்தீன் மதனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

2025 புனித ஹஜ் பயணம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

2025ம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தையும் சவூதி அரேபிய அரசாங்கம் இனிதே சிறப்பாக வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டு சவூதி அரேபிய மன்னர், இரு புனிதஸ்தலங்களின் காவலர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் மற்றும் உள்விவகார அமைச்சர் அமீர் அப்துல் அஸீஸ் பின் நாயிப் மற்றும் அனைத்து சவூதி அரேபிய உயரதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் சுமார் இரண்டு மில்லியன் மக்களை ஒரே இடத்தில் குறிப்பிட்ட ஓரிரு தினங்களில் ஒன்று சேர்ப்பதும், அவர்களுடைய அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதும், குறிப்பாக நிம்மதியாக வணக்க வழிபாடுகளில் ஈடுபட அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் மற்றும் மருத்துவம் உட்பட அனைத்து உட்கட்டமைப்புகளையும் அதிநவீன முறையில் செய்து கொடுப்பதும் இலகுவான காரியமல்ல.

இதற்கான அனைத்து திட்டங்களையும் நிர்வாக செயற்பாடுகளையும் சவூதி அரேபிய அரசு அதிகாரிகள் சென்ற வருட ஹஜ் முடிந்ததில் இருந்தே ஆரம்பித்து விடுகின்றனர். இது உலக மக்கள் அனைவரதும் மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது.

ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வது எமக்கு மிகப் பெரும் கண்ணியம் கெளரவம் என்ற சின்னம் சவூதி அரேபிய மன்னர்கள் உட்பட அந்நாட்டு சிறுவர்கள் உட்பட அனைத்து பிரஜைகளினதும் ஆழ் மனதில் அன்று தொட்டு இன்று வரை பதிந்த ஒன்று என்பதால் அரசன் உட்பட அனைவரும் ஹாஜிகளுக்கு சேவகர்களாகவே உள்ளனர்.

உண்மையில் இது எமக்கு பெருமையளிக்கிறது. ஒவ்வொரு ஹாஜிகளும் இதை நன்குணர்ந்து சவூதி அரேபிய அரசுக்கு நன்றியும் செலுத்துகின்றனர்.

2025 ஹஜ் வெற்றிகரமாக முடிந்ததையிட்டு சவுதி அரேபிய மன்னர் மற்றும் இளவரசர் உள்விவகார அமைச்சர் அனைவருக்கும் சவூதி அரசுக்கும் உலக இஸ்லாமிய நாட்டுத் தலைவர்கள், உலமாக்கள், நலன்புரி அமைப்புகள் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் விஷேடமாக தெரிவித்துள்ளனர்.

Hajj 2025: Muslim pilgrims walk to cast stones at pillars in the symbolic stoning of the devil, the last rite of the annual Hajj, in Mina near the holy city of Mecca, Saudi Arabia, Saturday, June 7, 2025. சவூதி அரேபியா அரசாங்கம் இவ்வருடம் ஹஜ்ஜை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கும் இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் உட்பட அனைத்து ஹஜ் யாத்திரிகர்களுக்கும் பாதுகாப்பான அடைக்கலம் அளித்தமைக்கும் அனைவரும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

இரண்டு மில்லியன் ஹாஜிகளும் சிறப்பாக தங்களது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு அவரவர் நாடுகளுக்கு நிம்மதியாக திரும்பிச் செல்ல இவ்வாறான அளப்பரிய சோவைகளைச் செய்து கொடுத்து 2025 ஹஜ்ஜை வெற்றிகரமாக நிறைவு செய்த சவுதி அரேபிய மன்னர், இளவரசர், உள்விவகார அமைச்சர் மற்றும்
சவுதி அரசுக்கும் மீண்டும் என் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


எம்.எச்.ஷேஹுத்தீன் மதனி (BA)

பணிப்பாளர்
அல் ஹிக்மா நிறுவனம்
கொழும்பு

Popular

More like this
Related

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...