2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

Date:

2025 ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்திற்கான திகதியை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 21ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic இற்குப் பிரவேசித்து விண்ணப்பிக்கலாம்.

2025 ஜூலை 21ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...