அக்கரைப்பற்றில் வருடாந்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புத்தகக் காட்சி இம்முறையும் உற்சாகத்துடன் 5ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது.
எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெறும் இப் புத்தகக் காட்சி வாசிப்பு பிரியர்களுக்கான ஒரு விழாக்காலமாக அமைவுள்ளது.
நூல் விற்பனை காலை 10.00 முதல் – காலை இரவு 10.00 மணி வரை நடைபெறுவதுடன் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையான நூல்கள் விற்கப்படவுள்ளன.
கல்வி, இலக்கியம், அறிவியல், சிறுவர் கதைகள், புனைகதை மற்றும் பல்வேறு பிரிவுகளுக்குரிய நூல்களும் விற்பனைக்கு உண்டு.
புத்தகங்களின் விலை அதிகம் என்ற கவலை வாசகர்களுக்கு இருப்பதாலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இம்முறை விசேட விலைக்கழிவுகளும் உள்ளன.