இஸ்ரேலிய அமைச்சர்களுக்கு இங்கிலாந்து தடை: இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் இருவரினதும் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Date:

இஸ்ரேலிய இரு அமைச்சர்களின் சகல விதமான வங்கிக் கணக்குகளையும் முற்றுமுழுதாக முடக்குவதற்கு இங்கிலாந்து தீர்மானத்துள்ளது.

கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட இன்னும் பல நாடுகள் மேற்கொண்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய பலஸ்தீன மனித உரிமைகளை கடுமையாக துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் தீவிரவாத வன்முறையைத் தூண்டியமை ஆகிய குற்றங்களுக்காக இஸ்ரேலின் இரண்டு வலதுசாரி அமைச்சர்களான, தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது இங்கிலாந்து (UK) தடை விதித்துள்ளது.

ஏற்கனவே இந்த இருவர் மீதும் கனடா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகள் இதேபோன்ற தடைகளை விதித்துள்ளதை தொடர்ந்து, மேற்படி இருவரினதும் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் அந்நாடுகள் மீது  பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், இந்த நடவடிக்கை “அருவருப்பானது” என்றும், “ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுக்கு” எவ்வாறு பதிலளிப்பது என்பதை முடிவு செய்ய அரசாங்கம் அடுத்த வார தொடக்கத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...