CID பணிப்பாளராக ஷானி அபேசேகர மீண்டும் நியமனம்

Date:

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த பதவியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால பதவி வகித்திருந்த நிலையில் இப்பதவிக்கு ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

CID யின் பணிப்பாளராக இதற்கு முன்னரும் இப்பதவியில் இருந்த அவர், அரசியல் ரீதியாக பணியாற்றுவதாக 2019 தேர்தலைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதோடு, வழக்குகளை போலியாக ஜோடிப்பதாக தெரிவித்து 2020 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட அவர, 2021 இல் ஜூன் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்த திறமை மிக்க அதிகாரிகளில் ஒருவரான ஷானி அபேசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பதவியில் இணைக்கப்பட்டிருந்தார்.

புதிதாக உருவாக்கப்பட்ட குற்றவியல் புலனாய்வு பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் (Criminal Intelligence Analysis and Prevention Division) பணிப்பாளராக அவர் பதவிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது CID பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...