கோட்டாபய ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்து இரத்து: அரசாங்கம் அதிரடி

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார காலத்தில்
வழங்கப்பட்ட 671 பாடசாலைகளில் தேசிய பாடசாலை உயர்வு
அந்தஸ்தை இரத்து செய்ய அரசாங்கம்  தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் ஒரு பாடசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை
அப்போது அப்போதைய அரசாங்கம் வழங்கியது அத்துடன் ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாவை ஒதுக்கி இந்த
நிதியால் பாடசாலைகளுக்கான பெயர் பலகைகளை அமைப்பதற்கும் அவசர திருத்த வேலைகளுக்கும் பயன் படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது.

எனினும் மேற்கூறிய தேசிய பாடசாலை அந்தஸ்து தற்போது நீக்கப்படுவதுடன் அவை இதற்கு முதல் இருந்தமாகாண சபை பாடசாலைகளாகவே இயங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

அன்றைய அரசின் அறிவுரைக்கு அமைய மேற்படி ஒவ்வொரு பாடசாலையும் தேசிய பாடசாலை பெயர் பலகைக்காக 5 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனவே இந்தப் பெயர்ப் பலகையை அகற்றுவதுடன் தேசிய
பாடசாலை பெயரில் தயாரிக்கப்பட்ட கடிதத் தலைப்பு மற்றும் பெயர் முத்திரைகளையும் அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

1000 தேசிய பாடசாலைகளை நாட்டில் உருவாக்கும் திட்டத்துக்கு இணங்க கோட்டாபய அரசாங்கம் இத்தேசிய பாடசாலை திட்டத்தை அறிமுகம்
செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...