இஸ்ரேல்- ஈரான் மோதல்: தற்போதைய சூழ்நிலையில் ஊடகவியலாளர்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது இன்றியமையாததாகும்

Date:

ஈரான் தொடச்சியாக இஸ்ரேல் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் இஸ்ரேலிய நகரங்களில் ஏற்படுத்தி உள்ள மற்றும் ஏற்படுத்தி வரும் பாதிப்புக்கள் பற்றி போதியளவு படங்களும் காட்சிகளும் தற்போது வெளி வந்துள்ளன.

இத்தகைய காட்சிகளை வெளியிட்டால் அல்லது பகிர்ந்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என இஸ்ரேல் தனது பிரஜைகளை அச்சுறுத்தியும் கூட சமூக ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக இவை போதியளவு வெளிவந்துள்ளன.

அது ஒருபுறம் இருக்கட்டும். இங்கு  குறிப்பிட விரும்பும் முக்கிய விடயம் இந்தப் படங்கள் பற்றிய சர்வதேச பார்வையாளர்களின் கருத்தாகும். நான் வாசித்த இந்தக் கருத்துக்களில் எவருமே இஸ்ரேல் மீது துளி அளவாவது அனுதாபம் தெரிவித்ததாக தெரியவில்லை. மாறாக எல்லோருடையதும் பொதுவான கருத்தும் They deserve for this (இது அவர்களுக்கு கிடைக்க வேண்டியது தான்) என்பதாகவே உள்ளது.

ஒரு நாடு பலமாக தாக்கப்படுகின்ற போது அந்த நாட்டின் மீது அனுதாபம் தெரிவிக்கக் கூட ஆள் இல்லை எனபது மிகவும் கேவலமான ஒரு நிலையாகும்.

அது மட்டுமல்ல படங்களையும் காட்சிகளையும் பார்வையிட்ட ஐ.நா உயர் அதிகாரி ஒருவர் உட்பட பலர் இவை காஸாவை அல்லவா நினைவு படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் படங்கள் காஸாவில் எடுக்கப்பட்ட பழைய படங்களா? என இன்னும் சிலர் நையாண்டித்தனமாக கேள்வி எழுப்பியும் உள்ளனர்.

(Gaza repeats in Israel) என்றும் சில குறிப்புகள் காணப்படுகின்றன.

சர்வ வல்லமை மிக்க ஒரு மாய சக்கதியாக தன்னை உருவகித்துக் காட்டி சுற்றியுள்ள நாடுகளை எல்லாம் தனது காலடியில் மண்டியிட வைத்த இஸ்ரேல் இன்று அடிவாங்கும் போது அனுதாபம் தெரிக்க கூட ஆளில்லாத ஒரு நாடாகிவிட்டது.

யுத்தம் எதற்குமே ஒரு முடிவல்ல. யுத்தம் தருவது அழிவுகளை மட்டுமே. எனவே இனிமேலாவது இஸ்ரேல் தன்னிலை உணர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதே சிறந்தது.

ஒரு முஸ்லிம் என்ற வகையில் இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்துள்ள அடி பலருக்கு சந்தோசத்தை தரலாம். அது இயல்பானது. ஆனால் நான் முன்னர் குறிப்பிட்ட பார்வையாளர்கள் எவரும் முஸ்லிம்கள் அல்ல. ஆனால் அவர்கள் இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு எதிரானவர்கள்.

இன்று சில முஸ்லிம் ஊடகவியலாளர்கள்(????) இஸ்ரேல் அடிவாங்குவதை சிரித்து கும்மாளமிட்டுக் கொண்டு விடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது கண்டிக்கப்பட வேண்டியது.

ஊடகவியலாளர்கள் எப்போதும் நடுநிலையாளர்களாக இருக்க வேண்டும். தமது சுய விருப்பு வெறுப்புக்களை அவர்கள் தாம் தோன்றும் காட்சிகளில் வெளிப்படுத்துவது ஊடக தர்மம் அல்ல.

ஒரு நாடு தாக்கப்படுகின்றது என்பதை மகிழ்ச்சியான சிரிப்பு ததும்பும் முக பாவனைகளுடன் ஒளிப்பதிவு செய்து வெளியிடுவது ஊடக தர்மம் அல்ல என்பதே எனது தாழ்மையான கருத்தாகும்.

Naushad Mohideen முகப் புத்தகத்திலிருந்து…

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...