சர்வதேச போரா மாநாடு இம்மாதம் கொழும்பில்: உச்ச பட்ச ஆதரவை வழங்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தல்

Date:

இலங்கையில் நடைபெறவுள்ள உலகளாவிய போரா சமூகத்தினரின் ஆன்மீக மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமான முழுமையான ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

உலகளாவிய போரா மாநாடு மற்றும் கண்காட்சி தொடர்பாக  நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்

போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுடன் இணைந்த வகையில் ஜூன் 27 முதல் ஜூலை 05 வரை போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சையதினா முபத்தல் செய்புதீன் சாஹேப் பங்கேற்புடன் பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தை மையப்படுத்தி, இந்த போரா மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறும்.

இந்த கண்காட்சி மற்றும் மாநாட்டிற்காக இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து சுமார் பதினைந்தாயிரம் போரா சமூகத்தினர் இந்நாட்டுக்கு வருகை தர இருப்பதால், அவர்களுக்கான விமான நிலைய வசதிகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குதல் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...