டெங்கு, சிக்குன்குன்யா நேய்களை கண்டறிய மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்!

Date:

அறிகுறிகள் மூலம்,  டெங்குவா? அல்லது சிக்குன்குன்யாவா? என்பதை சரியாகக் கண்டறிய முடியாதுயெனவும், தொடர்புடைய நோய்களைக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபதிரன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே இந்த நோய்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிக்குன்குன்யா மற்றும் டெங்கு காய்ச்சலின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஒரே விதமாகவே காணப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் வாந்தி போன்றவை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை சந்தித்து உரிய சிகிச்சைப்பெற வேண்டுமெனவும் மேலும், சிக்குன்குன்யா நோய் பெரும்பாலும் உடல் வலியை ஏற்படுத்துவதால், வலியைக் குறைக்க வலி நிவாரணிகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் கடுமையானதாக அமையும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள வைத்திய நிபுணர், காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க முடிந்தவரை பெரசிட்டமோல் மாத்திரைகளை மாத்திரம் பயன்படுத்துமாறும் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தண்ணீர், பழச்சாறு, கஞ்சி, ஜீவனி போன்றவற்றை அருந்துவதன் ஊடாக, நீரிழப்பைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிகுறிகள் தோன்றினால், அது டெங்குவா? அல்லது சிக்குன்குன்யாவா? என்பதை சரியாகக் கண்டறிய முடியாது எனவும், தொடர்புடைய நோய்களைக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிக்குன்குன்யா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர், சில நோயாளிகள் நீண்டகால மூட்டு வலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்பதால், இதற்கு முறையான சிகிச்சை தேவை என்றும், எனவே வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம் எனவும் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபதிரன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...