சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்?

Date:

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அடுத்த வாரம் கனடாவில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என அந்நாட்டின் மூத்த இராஜதந்திரி ஒருவர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பட்டத்து இளவரசர் வருடாந்த உச்சி மாநாட்டிற்கு கனடாவின் அழைப்பை நிராகரிப்பதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்று தூதர் கூறினார்.

G7 அமைப்பானது அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் கனடா உள்ளிட்ட அபிவிருத்தியடைந்த நாடுகளை உள்ளடக்கியதாகும்.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஜூன் 15 முதல் 17-ம் திகதி வரை கனடாவின் கனனாஸ்கிஸ் பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க  பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா சவூதி அரேபியா G7 உறுப்பினராக இல்லாவிட்டாலும் இந்நாடுகளின் தலைவர்களுக்கு கனடா அரசு சார்பில் அழைக்கப்பட்டது.

இந்த நாடுகளிடையேயான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு விடயங்களை விவாதித்து, மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக G7 செயல்பட்டு வருகிறது.

இளவரசர்  முகமது பின் சல்மான், மத்திய கிழக்கில் ஒரு சக்திவாய்ந்த நபராக உள்ளார், மேலும் காசாவில் கொடிய போர் நீடிக்கும்போது அமைதியை நிலைநாட்டும் நம்பிக்கையில் அவரது எண்ணெய் வளம் மிக்க நாடு ஒரு முக்கிய பங்களிப்பாளராகக் கருதப்படுகிறது.

பல ஆண்டுகளாகப் பதற்றமான உறவுகளுக்குப் பிறகு சவூதி இளவரசருக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களை விடுவிக்குமாறு கனடா சவூதி அரேபியாவை பகிரங்கமாக வலியுறுத்தியது, இதனால் ரியாத் கனடாவின் தூதரை வெளியேற்றவும், வர்த்தகத்தை நிறுத்தவும், கனேடிய பல்கலைக்கழகங்களில் இருந்து சவூதி மாணவர்களையும் திரும்பப் பெற்றது.

இதன்பின் 2024 ஆம் ஆண்டுக்குள், சவூதி-கனடா வணிக கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டது, இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளில் வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை உருவாக்கியது.

அரசியல் நெருக்கடியால் லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த மார்க் கார்னி புதிய பிரதமரானார்.

இந்நிலையில் தற்போது மார்க் கார்னி சவூதி இளவரசரை உச்சி மாநாட்டுக்கு அழைத்துள்ளார். இதன்மூலம் இருநாடுகள் இடையேயான உறவு மேம்படுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...