நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை

Date:

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு , காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும்என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் பொத்துவில் வழியாக அம்பாந்தோட்டை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது அது 50-55 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

Popular

More like this
Related

வியட்நாம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் செங்கம்பள வரவேற்பு

இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான...

வியட்நாம் ஜனாதிபதி இலங்கை வருகை: பாராளுமன்றத்தில் விசேட உரை

வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின்...

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன அவரது வீட்டில் சடலமாக மீட்பு.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை!

நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்...