கெரண்டிஎல்ல பஸ் விபத்தின் விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிப்பு

Date:

கொத்மலை, ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் நேற்று புதன்கிழமை (11)  கையளிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, கடந்த 11ஆம் திகதி அதிகாலை 4.45மணியளவில் நுவரெலியா-கண்டி வீதியில் உள்ள கெரண்டிஎல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்படி, பஸ் சாரதிக்கு ஏற்பட்ட சோர்வு, நித்திரை கலக்கம் மற்றும் ஓய்வின்மை ஆகிய காரணங்களினாலேயே விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த குறித்த விசாரணைக்குழுவின் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண,

குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட, 84 பேர் பயணித்தனர் என  குறிப்பிட்டுள்ளார்.

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதனை அடுத்து அருகிலுள்ள குழியொன்றில் விழுந்து பஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்தே விபத்து நேர்ந்துள்ளது.

எவ்வாறாயினும் விபத்தில் மரணித்த மேற்படி சாரதியின் மீது முழுப் பொறுப்பையும் சுமத்த முடியாது என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்ததோடு, 60 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...