இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தல்!

Date:

ஈரான் மீது இஸ்ரேல் இன்று (13)  நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமைதியின்மை காரணமாக, விமானப் பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலுக்கு வரும் மற்றும் புறப்படும் இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் விமானப் பயணங்களை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், விரோதப் தரப்பினரிடமிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பான வீடுகளுக்கு அருகில் இருக்கவும் தூதரகம் அறிவுறுத்துகிறது.
இஸ்ரேலும் அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது.

இலங்கையர்கள் எப்போதும் குடிநீரையும் உலர் உணவையும் தங்களிடம் வைத்திருக்குமாறு இலங்கைத் தூதரகம் அறிவுறுத்துகிறது, மேலும் தூதரக அதிகாரிகளை 24 மணி நேரமும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சு, இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், சமீபத்திய நிலைமை குறித்த தகவல்களை சேகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

இஸ்ரேல் முழுவதும் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இஸ்ரேல் மற்றும் ஈரானில் விமானச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...