இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக 34 பேர் கைது

Date:

இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் 2025 ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரை 3,022 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த பத்து அதிகாரிகளும், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகளும் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகுவர்.

இதற்கு மேலதிகமாக ஆறு பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலக் கட்டத்தில் இலஞ்சம் கோரல் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஆறு வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 273 இலஞ்சம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் CIABOC தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம்: பிமல் விடுத்த இறுதி எச்சரிக்கை

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் பதவியை இராஜினாமா செய்யலாம்...

– பெரும்பாலான பகுதிகளில் 75 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....