இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை புலனாய்வு பணிப்பாளராகப் பணியாற்றிய காலப் பகுதியில், பொத்துஹரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.