இஸ்ரேலின் டெல் அவிவிவாக மாறிய அறுகம்பே?: வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் தகவல்!

Date:

நாட்டில் அதிகரித்துள்ள இஸ்ரேலிய ஆதிக்கம் தொடர்பில் சுற்றுலா பயணியொருவர் இலங்கை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், அறுகம்பே குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலா பயணியான டி.ஜே டாம் மோனகிள் என்பவர் காணொளியொன்றில் கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் அவர், “அறுகம்பே இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அறுகம்பே குடா இஸ்ரேலியர்களுக்கு வழங்குவதாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டதா? என்றும் அவர் அந்த காணொளியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அப்பகுதியில் உள்ள பல்வேறு உணவகங்களின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட டாம் மோனகிள், சிங்களம் அல்லது தமிழுக்குப் பதிலாக பல இடங்களில் ஹிப்ரு மொழி பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியதோடு, சில இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவான பிரச்சார ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டியிருப்பதையும் அடையாளங்காட்டியுள்ளார்.

இதேவேளை,  அறுகம்பே குடாவில் உள்ளூர்வாசிகளைத் தடைசெய்து இஸ்ரேலியர்கள் நிகழ்வுகளை நடத்தியதையும் அவர் அதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நிலைமையை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தை மேற்கோற்காட்டி கோரிக்கையொன்றையும் டாம் மோனகிள் முன்வைத்துள்ளார்.

Popular

More like this
Related

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...

தொழில் திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை வாரம் ஆரம்பம்!

ஊழியர்களின் தீர்க்கப்படாத ஊழியர் சேமலாப நிதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பிணக்குகளுக்கு...