ஊட்டச்சத்து மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றவா்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 8 சிறுவா்கள் இரண்டு பெண்கள் உள்பட 15 போ் உயிரிழப்பு.

Date:

மத்திய காஸாவின் டெய்ர் அல்-பாலா நகரிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் பட்டினியால் உடல் நலம் குன்றியவா்களுக்கு ஊட்டச்சத்து மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றவா்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எட்டு சிறுவா்கள் இரண்டு பெண்கள் உள்பட 15 போ் உயிரிழந்தனா்.

மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஏராளமானவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறினா்.

அந்த மருத்துவமனையை நடத்தும் அமெரிக்காவைச் சோ்ந்த ப்ராஜெக்ட் ஹோப் உதவி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல் சா்வதேச சட்டத்துக்கு எதிரான செயல் என்று கண்டிக்கப்பட்டுள்ளது.

எனினும், ‘ஒரு “ஹமாஸ் பயங்கரவாதியை’ குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய இஸ்ரேல் இராணுவம், பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியது.

இது தவிர, காஸாவின் பிற பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இத்துடன், காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கடந்த 2023 அக்டோபா் 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 57,762-ஆகவும், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,37,656-ஆகவும் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கத்தாா், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போா் நிறுத்த பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்தாலும், இதுவரை குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...

“வரவு எட்டணா, செலவு பத்தணா…”: சமூக ஊடகங்களில் நுகர்வதைவிடப் படைப்பவர்களே முன்னேறுகிறார்கள்!

-Eng. Rifai பட்டய மின்பொறியியலாளர் (Chartered Electrical Engineer), நிலைபேறான மின் உற்பத்தி,...

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாசிக்கை, 90...