மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ் மொழித்தினப் போட்டிகளில், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம் மூன்று முதலிடங்களைப் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
தமிழறிவு வினா விடை, முஸ்லிம் நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப்போட்டி (பிரிவு 03) ஆகிய போட்டிகளில் கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயம் முதலிடங்களை பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும்.
இது கல்வி துறையிலும், தமிழ்மொழிப் பரம்பரையிலும் பாடசாலையின் மாணவிகளின் திறமையையும், கல்வி நிலைமையையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான வெற்றியாகக் கருதப்படுகிறது.
(ரிஹ்மி ஹக்கீம்).