நாட்டில் தீவிரமடைந்து வரும் தோல் நோய்கள்:பொதுமக்கள் சுகாதார பழக்க வழங்கங்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்

Date:

நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்படி ரிங்வோர்ம் (Ringworm)எனப்படும்  பூஞ்சை தோல் நோய்  நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் ஏற்பட்டால், தோலில் சிவப்பு நிறத்தில்  வட்ட வடிவ தடிப்புகள் தோன்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களின் தொடுதலினாலோ அல்லது  ஆடைகளை அணிவதாலோ  இந்நோய் தொற்றுப்  பரவும் வாய்ப்பு அதிகமாகக்  காணப்படுகின்றது.

மேலும் இந்த நோய்த் தொற்றுக்  காரணமாகத் தோல் சிதைவு, வறட்சி, சிவத்தல், அரிப்பு, எரிதல் மற்றும் ஒட்டும் தன்மை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள்  இலங்கை அரசினால்  அங்கீகரிக்கப்பட்ட பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள், கிரீம்கள், மாத்திரைகள் என்பவற்றைப் பயன்படுத்தலாம் எனவும் ஏனைய  தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நோய் தொற்று பரவுவதைத் தடுக்க பொதுமக்கள்  சுகாதார பழக்க வழங்கங்களைப்  பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சுத்தமாக இருத்தல், ஈரப்பதத்தை தவிர்ப்பது, மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பொருட்களைப் பகிர்வதைத் தவிர்ப்பது போன்ற தடுப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

சுகாதார அதிகாரிகள், மக்களுக்கு தனிப்பட்ட சுகாதாரத்தை பேண, தனிப்பட்ட பொருட்கள் (அங்கியின் சட்டை, துணி, மேக்கப், சீப்பு முதலியன) பகிர்ந்துகொள்வதை தவிர்க்க, அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடி சிகிச்சை பெற அறிவுறுத்தி வருகின்றனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...