மாவனல்லை ஆயிஷா உயர்கல்விக் கல்லூரியின் 25ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வரலாறு காணாத வகையில் ஒரு மாபெரும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“அருள் மிகு குடும்பம், இன்பம் நிறைந்த இல்லம்” எனும் கருப்பொருளில் நடைபெறும் இக்கண்காட்சி , ஆகஸ்ட் 7 முதல் 11 வரை கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது.
யார் யார் கலந்து கொள்ளலாம்?
- பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் (குடும்பமாக)
- தரம் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட பாடசாலை மாணவிகள்
- பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகள்
- பல்கலைக்கழக மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவிகள்
கண்காட்சியைப் பார்வையிடுபவர்கள் பின்பற்ற வேண்டிய படிமுறைகள்**
1. திகதியையும் நேரத்தையும் தெரிவு செய்தல்
• ஆகஸ்ட் 7 முதல் 11 வரையிலான திகதிகளில் தங்களுக்கு வசதியான ஏதேனும் ஒரு திகதியைத் தெரிவு செய்யலாம்.
குறிப்பு:பாடசாலைகள் மற்றும் பெண்கள் அரபுக் கல்லூரிகளுக்கு 7, 8 மற்றும் 11 ஆம் திகதிகள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை கவனத்தில்கொள்க.
• நீங்கள் தெரிவு செய்த திகதியில் பின்வரும் நேர ஒதுக்கீட்டில் (Time slot) விரும்பிய ஒன்றை பதிந்து கொள்ளலாம்:
1. Morning Slot: 8.00 am – 12.00 noon
2. Evening Slot: 1.00 – 5.00 pm
குறிப்பு: 12:00 மணிக்கு முதலாவது நேர ஒதுக்கீடு நிறைவடையும்.
நீங்கள் தெரிவு செய்த திகதியையும் நேரத்தையும் பின்வரும் இலக்கத்தைத் தொடர்பு கொண்டு முற்பதிவு செய்து கொள்ளவேண்டும். 0764419155
குறிப்பு:
1. குறித்த இலக்கத்திற்கு பின்வரும் நேரங்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யும்படி வினயமாய் வேண்டுகிறோம்.
காலை 9.00 am முதல் 5.00 pm வரை &
மாலை 7.00 pm முதல் 9.00 pm வரை
2. பதிவு செய்யும்போது கண்காட்சியில் கலந்து கொள்ளும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட்டுச்சொல்வதன் மூலம் சங்கடங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
3. “Community WhatsApp” குழுவில் இணைக்கப்படுதல்
பதிவு செய்து கொண்ட ஒவ்வொருவரும் குறிப்பிட்ட திகதிக்குரிய “Community WhatsApp” குழுவில் இணைக்கப்படுவீர்கள். கண்காட்சி பற்றிய மிக முக்கியமான அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறை மூலம் பகிரப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.
எனவே, பதிவின்போது உங்களது WhatsApp இலக்கத்தையும் எங்களுக்கு வழங்குவதன் மூலம் மேலதிக தகவல்களை அறியலாம். குழுவில் இணைக்கப்படாத பட்சத்தில் அது குறித்து எங்களுக்கு மீள அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
4. கண்காட்சியைப் பார்வையிடுதல்
நீங்கள் பதிவு செய்த திகதி மற்றும் குறித்த நேரத்தில் மாவனல்லை ஆயிஷா வளாகத்திற்கு வருகை தரவும். வளாக நுழைவாயிலில் அமைந்துள்ள “Ticket counters”இல் “Tickets” களை கொள்வனவு செய்யலாம்.
Ticket விலை விவரங்கள்
1. வயது 5 மற்றும் அதற்குக் கீழ்: இலவசம்
2. வயது 5 முதல் 12 வரை: 100 LKR
3. வயது 12க்கு மேல்: 200 LKR