வக்ப் நடைமுறைகளை பேணி நிர்வாகத்தெரிவு நடத்துமாறும் கணக்கறிக்கைகளை உடன் சமர்ப்பிக்குமாறும் கோரி முஸ்லிம் திணைக்களம் பள்ளிவாசல்களுக்கு சுற்றறிக்கை

Date:

பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நம்­பிக்­கை­யா­ளர்­களை தெரிவு செய்தல் மற்றும் கணக்­க­றிக்­கை­களை சமர்ப்­பித்தல் தொடர்பில் அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யா­ளர்கள் மற்றும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் சுற்றறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்­பாக அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யா­ளர்­களின் பதவிக் காலம் முடி­வ­டைந்­த­வர்­களும் குறிப்­பாக விஷேட நம்­பிக்­கை­யா­ளர்­களின் பதவிக் காலம் முடி­வ­டைந்­த­வர்­களும் மிக விரை­வாக புதிய நிரு­வாகத் தெரிவை தெரிவு செய்­வ­தற்­கான ஆயத்­தங்­களை மேற்­கொள்­வ­துடன் வக்ப் சட்ட நடை­மு­றை­களைப் பேணியும் பள்­ளி­வா­சல்­களின் யாப்பைப் பேணியும் செய்­யு­மாறு திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய நிரு­வாகத் தெரிவை செய்­வ­தற்கு தயா­ராகும் பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யா­ளர்கள் மற்றும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் அப்­பி­ர­தேச கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் தொடர்பு கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

மேலும் வரு­டாந்த கணக்­க­றிக்­கை­களை சமர்ப்­பிக்­காத பள்­ளி­வா­சல்கள், சமர்ப்­பிக்­காத வரு­டங்கள் அனைத்­திற்கும் தனித்­த­னி­யாக திணைக்­கள இணையத்தளத்தில் (Web: w.w.w.muslimaffairs.gov.lk) இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...