வரட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை: நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்

Date:

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

வரட்சியான காலநிலை காரணமாக  நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்து வருவதுடன், கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் நீரை பயன்படுத்துகின்றனர்.இதனால் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், அன்றாட தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறும், வாகனங்களை கழுவுதல், தோட்டங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நீரை பயன்படுத்துவதை குறைக்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அச்சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...